Blogger Tricks

Thursday, 27 February 2014

Windows does not allow you to create a folder named CON. This is because CON and a number of other character strings like PRN, AUX, NUL etc. are reserved names and cannot be used to name folders or files.

But still  if you want to create a folder named CON, then follow these simple steps:
  1. Create a folder
  2. Press Alt + 255 (Invisible character)
  3. Then type CON or other reserved names like PRN, AUX
  4. Press Enter and you are ready with CON folder 
  5. Enjoy
 * So basically given input string is: 'Invisible_Character'+CON 

Wednesday, 26 February 2014

Microsoft 'ன் புதிய Download Manager இலவசமாக.



நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான்.  தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.
Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்
பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.  ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட்.   அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.


இதற்க்கான தரவிறக்க லிங்க் இதோ.  தரவிறக்கம் செய்து பயனடையுங்கள் நன்றி...

Hard Disk தேவை இல்லை!


இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம்.  USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம்.  ஆனால் அதை கணினியில் நிறுவிய பிறகுதான் பயன்படுத்த முடியும்.  அதற்காக Portable மென்பொருள்களை நாடுவோம் அது
எல்லோருக்கும் தெரியும்.
  ஆனால் தற்போது பலரும் Portable
இயங்குதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  அதில் நான் பயன்படுத்தி பிடித்த ஒரு Portable இயங்குதளத்திர்க்கான லிங்க்இதோ.   இது மட்டும் அல்லாமல் அதில் பதிந்து பயன்படுத்த கூடிய பல புதிய Portable மென்பொருட்களை அந்த தளத்தின் வலதுபுறம் காணலாம்.  தேவையானவற்றை பதிவிறக்கி USB Drive 'ல் பதிந்து கணினியில் பதியாமலும் பயன்படுத்தி மகிழலாம்.  இதை விட அதிக வசதிகளுடன் வேண்டும் என்றால் இந்த லிங்கில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம்.  இதில் 200 'க்கும் அதிகமான கேம் மற்றும் மென்பொருட்கள் பதிந்தே தரப்படுகிறது.  மற்றும் தேவையான போர்டபிள் மென்பொருட்களை பதிவிறக்கி பதிந்தும் பயன்படுத்தலாம்.

இன்டர்நெட் குக்கீகளால் என்ன பயன்?


பல வினாக்கள் கொண்ட ஒரு இனைய தளத்தை பார்வையிடுகிறீர்கள்.  முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிளும் உள்ளதாக் வைத்துக் கொள்வோம்.  இரண்டாவது பக்கத்திற்குத் செல்லும்போது முதல் பக்கத்தில்
இருந்த
கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே
இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார்  என்பதை அந்த தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் சர்வர் அறிந்து கொள்கிறது.  இவ்வாறு பல இனைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த தளம்
இது எவ்வாறு சாத்தியம்?
மேற் சொன்ன செயற்பபாட்டின் போது வெப் சர்வருக்கு உதவுகிறது.  நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய டெக்ஸ்ட் பைல் குக்கீ எனப்படுகிறது.  சில இனைய தளங்களைப் பார்வையிடும் போது அந்த வெப்சர்வர் ஒரு குக்கீ பைலை நமது கணினியில் சேமித்துவிடுகிறது.  இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரியவர் நீங்கள்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்.  பிறகு முன்னர் பார்வையிட்ட ஒரு இணையதளத்தை மறுபடியும் பார்வையிடும் போது குக்கீஸ் நமக்கு உதவுகிறது.  அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வேர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்கிறது , இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இனைய தளத்திற்குள் ஒருவரின் செயர்ப்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியும்.  நன்றி...


கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?




உங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள்.  இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன.  அதில் ஒன்று co2saver என்ற
மென்பொருள் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் 
செய்து பயன்படுத்தலாம்.  இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.

Co2saver                                                        Download

உங்களுடைய ஈமெயில் முகவரியை ஐகான்' ஆக மாற்றும் தளம்.


நாம் எந்த மாதிரியான ஈமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தாலும் நமக்கு டெக்ஸ்ட்டாகத்தான் கிடைக்கும்.  ஆனால் வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய வலைபதிவு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அவர்கள் இங்கே கிழே
கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் உள்ள தளத்திற்கு சென்று (Enter your e-mail address:) என்று இருக்கும் இடத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து அதற்கு பக்கத்தில் இருக்கும் கட்டத்தில் (gmail, yahoomail, hotmail, etc) எதில் அக்கௌன்ட் வைத்திருகிரிர்கள் என்று தேர்வு செய்து கடைசியாக (.com, .in, etc) இதில் எது என்று தேர்வு செய்து கிழே இருக்கும் genarate என்ற பொத்தானை அழுத்துங்கள்.  அவ்வளவுதான் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரி படம் போன்று உங்களுடையதும் தோன்றும். படத்திற்க்கான லின்க்கும் அங்கேயே கொடுத்திருப்பார்கள் அதையும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.  இதை உங்கள் தளத்தில் இணைத்தால்.  உங்கள் தளத்தை மேலும் சிறிது அழகாக காட்டும். இதற்க்கான லிங்க் இதோ