Blogger Tricks

Wednesday, 5 March 2014

வாட்ஸ் ஆப்பில் அப்படி என்ன இருக்கு என்று பேஸ்புக் 19 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்குகிறது?


பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் என்றால் என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்?

பேஸ்புக் நிறுவனம்  19 பில்லியன் அமெரிக்க டொலர்  கொடுத்து வாட்ஸ்ஆப்பை வாங்குகிறது என்ற செய்தி தான் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து வாங்கும் அளவுக்கு வாட்ஸ்ஆப்பில் என்ன உள்ளது என்று பலரும் வியக்கின்றனர். 

ஃபேஸ்புக்கை கவர்ந்த வாட்ஸ்ஆப் என்றால் என்ன என்று பார்ப்போம். வாட்ஸ்ஆப் என்பது ஆன்லைன் மெசேஜிங் சர்வீஸ் ஆகும். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களை நண்பர்களுக்கு, நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன் தான் வாட்ஸ்ஆப். இது இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

வாட்ஸ்ஆப்பை மாதத்திற்கு 450 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். அதாவது ட்விட்டரை விட 200 மில்லியன் பேர் கூடுதலாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள். மேலும் தினமும் 10 லட்சம் பேர் புதிதாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இது தான் ஃபேஸ்புக்கின் கவனத்தை வாட்ஸ்ஆப் பக்கம் ஈர்த்தது.
வாட்ஸ்ஆப் மூலம் மாநிலம் விட்டு மாநிலம், ஏன் நாடு விட்டு நாடு மெசேஜ் அனுப்பலாம். அதுவும் கட்டணம் இல்லாமல். இது தான் இளம் தலைமுறையினரை வாட்ஸ்ஆப் பக்கம் இழுத்துள்ளது.

செல்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உங்களின் செல்போன் எண்ணை டைப் செய்து, மெசேஜ் மூலம் வரும் கோடை பயன்படுத்தி சரிபார்த்தால் அதை பயன்படுத்தலாம்

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK
















      ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா? 

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.